Loading...
 

வழிகாட்டுதல் பற்றிய சுருக்கம்

 


ஃபிராங்க் தோரோகுட் மூலம் பங்களிக்கப்பட்டது

ஆக்ஸ்போர்டு அகராதி வழிகாட்டும் நபரை "அனுபவம் வாய்ந்த, நம்பகமான ஆலோசகர்" என்று வரையறுக்கிறது.

ஏறக்குறைய அனைத்து மக்களுக்கும் பொது சொற்பொழிவாற்றுவது என்பது உள்ளுக்குள்ளே பயமாகவே உள்ளது.
ஒரு கிளப்பில் சேர்வதற்கு தைரியம் தேவை, ஆனால் ஒரு புதிய உறுப்பினர் கிளப் சந்திப்புகளை நடத்துவதற்கும் பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்வதற்கும் முழு தொடர் நடைமுறைகளையும் வழிமுறைகளையும் எதிர்கொள்கிறார்.
புதிய உறுப்பினர்களுக்கு இது மிகவும் பெரிய விஷயமாகத் தோன்றலாம், ஆனால் அதிக அனுபவமுள்ளவர்களுக்கு இது வழக்கமாகிவிட்டது.
எனவே, கிளப்பில் வழிகாட்டுதலாக திகழுபவரின் அடிப்படை பாத்திரம் என்பது மிகவும் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் "புதிய உறுப்பினரின் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதேயாகும்", மேலும் அவர்களுக்குத் தெளிவற்ற விஷயங்களை விளக்குவது, கிளப் சந்திப்புகளுக்கு வெளியே உட்பட, தேவைப்படும்போது அவர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவுவது ஆகியனவும் இந்தப் பாத்திரத்தில் இடம்பெறும்.

மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், வழிகாட்டுதல் பெறுபவருக்கும் வழிகாட்டுபவருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவதே. குறிப்பாக புதிய கிளப்புகளில் இது உண்மையானதாக இருக்கிறது.

வெற்றிகரமான கிளப் வழிகாட்டுதல் திட்டத்திற்கான சில பரிந்துரைகள் இதோ இங்கே:

  • கிளப் செயற்குழு வழிகாட்டியாக (ஆசானாக) திகழுபவரின் பட்டியலைத் தொகுக்க வேண்டும். இவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களாக இருக்க வேண்டும், அல்லது, கிளப்பில் புதியவர்களாக இருந்தாலும், பொது சொற்பொழிவு, கற்பித்தல் போன்றவற்றில் கொஞ்சம் அனுபவமுள்ளவர்களாக இருக்க வேண்டும் அல்லது கிளப்பின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கான குறிப்பிட்ட திறனைக் காட்டியிருக்க வேண்டும்.
  • வழிகாட்டுபவர்களின் ஒப்பந்தத்தைப் பெற்ற பிறகு, உறுப்பினருரிமையின் துணைத்தலைவர் வழிகாட்டியாக (ஆசானாக) திகழுபவர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டுதலைப் பெறுபவர்களின் பட்டியலைத் தயாரித்து பராமரிக்க வேண்டும், ஒரு வழிகாட்டிக்கு அதிகபட்சம் மூன்று பேர் இருக்கலாம்.
  • இந்தப் பட்டியல் கிளப்பில் புதிதாக சேரும் ஒவ்வொரு உறுப்பினரிடமும் கொடுக்கப்பட வேண்டும், பட்டியலில் ஏற்கனவே இருப்பவர்களிடமிருந்து அவர்கள் தங்கள் வழிகாட்டியைத் தேர்வு செய்ய வேண்டும், அவர்களைப் பற்றி ஒருவருக்கொருவர் தெரிந்துக் கொள்ள சில சந்திப்புகள் காத்திருக்க வேண்டியிருந்தாலும் கூட. 
  • வழிகாட்டுபவரும் வழிகாட்டுதல் பெறுபவரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை பரிமாறிக்கொள்ள வேண்டும்,  ஃபேஸ்டைம், வாட்ஸ்அப், ஸ்கைப் போன்ற நவீன தகவல்தொடர்பு முறைகள் மூலம் இணைப்பில் இருக்க வேண்டும்.

அவர்கள் சமூக ரீதியாக சந்திக்கலாம், அங்கு வழிகாட்டியாக திகழுபவர் கல்வித் திட்டம், கிளப் நடைமுறைகள் மற்றும் கடமைகளை விளக்கலாம் மற்றும் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கலாம்.
பின்னர், வழிகாட்டியாக (ஆசானாக) திகழுபவர் வழிகாட்டுதல் பெறுபவரின் முதல் சொற்பொழிவு, மொழியைத் திருத்துதல் போன்ற முக்கியமான தருணங்களில் இருக்க வேண்டும்.

இருப்பினும், புதிய உறுப்பினர் வழிகாட்டியாக திகழுபவரை முழுமையாக நம்பியிருக்கக் கூடாது, மெட்டீரியல்களைப் பயன்படுத்தி பயிற்சித் திட்டம் மற்றும் பல்வேறு உறுப்பினர்களின் பாத்திரங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Monday September 27, 2021 20:40:41 CEST by shahul.hamid.nachiyar.